மேலூர்: மாட்டு வண்டி பந்தயத்தை ரசித்த கிராம மக்கள்

70பார்த்தது
மேலூர்: மாட்டு வண்டி பந்தயத்தை ரசித்த கிராம மக்கள்
மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளலூர் நாட்டை சேர்ந்த வெள்ளநாயகம்பட்டி அருள்மிகு ஸ்ரீ மந்தைக்கருப்பண சுவாமி கோவிலின் கார்த்திகை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 6-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் வெள்ளநாயகம்பட்டி இடைய வலசை பாலம் அருகே இன்று (டிச. 7) நடைபெற்றது.  பெரிய மாட்டில் 9 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசு மதுரை ஜெய்ஹிந்தபுரம் அக்கினி முருகன், இரண்டாம் பரிசு வெள்ளநாயகம்பட்டி ராமையா இளங்கச்சி, மூன்றாம் பரிசு பரவை சோனைமுத்து, நான்காம் பரிசு புலிமலைபட்டி பிரபு, சிறிய மாட்டில் 21 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.  முதல் பரிசு ஒத்தபட்டி ஜெகநாதன், இரண்டாம் பரிசு பல்லவராயன்பட்டி வர்ஷா இளமாறன், மூன்றாம் பரிசு கிடாரிபட்டி புல்லட் முருகேசன், நான்காம் பரிசு பெய்யாதநல்லூர் கபீப் முகமது வெற்றி பெற்றனர். முதல் பரிசு நல்லாங்குடி முத்தையா, இரண்டாம் பரிசு தனியாமங்கலம் போஸ், மூன்றாம் பரிசு சுண்ணாம்பூர் கரும்புச்செல்வம், நான்காம் பரிசு தனியாமங்கலம் சுந்தர் ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகையும், வெற்றி கோப்பையை விழா குழுவினர் வழங்கினார்.  மாட்டு வண்டி பந்தயத்தை மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்த மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் ஆரவாரம் செய்து கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி