சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகம்

67பார்த்தது
சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகம்
மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ. கா. ப. , அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குதல் என்னும் கருத்தை மையமாகக் கொண்டு இன்று மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் "சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமூகம் "-எனும் தலைப்பிலான மாணவர் குழுக்களை ( Road safety club & Anti - Drug club) துவக்கி வைத்தார். மேலும் சாலையில் கவனக்குறைவு, தேவையில்லாத நபர்களின் பழக்கத்தின் வழியாக வரும் போதை பொருள் பழக்கம் ஆகியவற்றில் இருந்து மாணவர்கள் விலகி நிற்பதற்கான அறிவுரைகளையும் வழங்கினார். சாலை பாதுகாப்பு குழு மாணவர்களுக்கு தலைக்கவசம், டீ சர்ட் , தொப்பி ஆகியவற்றை வழங்கினார்.


மேலும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் இல்லாத சமுதாயம் உருவாக மாணவரின் கடமை எனும் தலைப்பிலும், சாலை பாதுகாப்பு எனும் தலைப்பிலும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் , காவல்துறையினர் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி