தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது.

1041பார்த்தது
தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது.
மதுரை கீரைத்துறை பகுதியில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை கீரைத்துறை திரவியலிங்கேஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த கணேஷ்மாணிக்கம் (35) என்பவர் தனது மகனுக்கு கடந்த 31-ஆம் தேதி நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆட்டோவை அழைக்க இருளப்பன் கோவில் தெருவுக்குச் சென்றார். அப்போது அங்கு கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய வேறு சமூகத்தைச் சேர்ந்த அரிமுருகன் (23), மணி உள்ளிட்டோர் பட்டாசை கொளுத்தி கணேஷ் மாணிக்கம் தலையில் போட்டனராம். இதனால் அவர் வீட்டுக்கு திரும்பிச் சென்று விட்டார்.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேஷ்மாணிக்கம், மீண்டும் இருளப்பன் கோவில் தெரு வழியாக சென்றபோது, ஆயுதங்களுடன் வழிமறித்த அரிமுருகன். மணி ஆகியோர் அவரது சமூகத்தை அவதூறு செய்து. அவரைக் கண்டித்ததுடன் தாக்கி கொல்ல முயன்றனராம்.

அப்போது கணேஷ் மாணிக்கத்தின் சப்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்ததால் அரிமுருகன், மணி இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து கீரைத்துறை போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அரிமுருகனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான மணியைத் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி