மதுரை மாநகர் தத்தனேரி பாரதிநகர் பகுதியில் 3 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது.
இதனால் அந்த பகுதியை சுற்றி உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.