தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூர் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை - கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் (01928) மதுரையில் இருந்து அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 01, 08 15, 22, 29, டிசம்பர் 06, 13, 20, 27, ஜனவரி 03 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 11. 35 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10. 20 மணிக்கு கான்பூர் சென்ட்ரல் சென்று சேரும். மறு மார்க்கத்தில் கான்பூர் சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில் (01927) கான்பூர் சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 09, 16, 23, 30, நவம்பர் 06, 13, 20, 27, டிசம்பர் 04, 11, 18, 25, ஜனவரி 01 ஆகிய புதன் கிழமைகளில் மதியம் 12. 30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் காலை 09. 30 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் இணைந்த இரண்டு அடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவுஇன்று (அக்.,1) காலை 8 மணிக்கு துவங்குகிறது.