மதுரை மாநகர் தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை 190கோடி ரூபாய் செலவில் கோரிப்பாளையம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் மேம்பாலத்திற்கான கான்கிரிட் கம்பிகள் மடக்கிவிடப்பட்ட நிலையில் அந்த பகுதியில் உள்ள மேம்பால சுவர்களில் உள்ள மடக்கவிடப்பட்ட கம்பிகளின் நடுவே தவழ்ந்துசென்றும், நடந்துசென்றும் விளையாடிவருகின்றனர். மேலும் பணி காரணமாக கம்பிகள் ஆங்காங்கே நீட்டியுள்ள நிலையில் இது போன்ற சிறுவர்கள் விளையாடும் போது தவறி விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.