ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஊறுகாயில் எண்ணெய், உப்பு, காரம் போன்றவை அதிகம் சேர்க்கப்படுவதால் நாளடைவில் அது இதய நோய்க்கு வழிவகுக்கும். இதில் பதப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால் அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி வயிறு தொடர்பான பிரச்னைகளை உருவாக்கும். ஊறுகாய் சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு கேடு விளைவிக்கும்.