பாஜக மாவட்ட தலைவர்கள் மீது சரமாரி புகார்!

74பார்த்தது
பாஜக மாவட்ட தலைவர்கள் மீது சரமாரி புகார்!
மதுரை மாவட்ட பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக விசாரிக்க, பாஜகவின் மாநில பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஏ. பி. முருகானந்தம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர், மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட, ப மண்டல் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார்.

இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில், மாநகர் மாவட்டத் தலைவர் மகா சசீந்திரன் மீது 20-க்கும் மேற்பட்டோரும், கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன் மீது 60-க்கும் மேற்பட்டோரும், மேற்கு மாவட்டத் தலைவர் சசிகுமார் மீது 50-க்கும் மேற்பட்டோரும் புகார் அளித்துள்ளனர்.
கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பொறுப்பு கேட்டு கிடைக்காதவர்கள், மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகளால் கண்டிக்கப்பட்டவர்கள் என ஏராளமானோர் புகார்களை அடுக்கியுள்ளனர்.

பாஜக மாவட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் கட்சியின் மைய குழுவிடம் ஏ. பி. முருகானந்தம் நேற்று கருத்து கேட்டார். பின்னர், மதுரை பாஜக உட்கட்சி பூசல் குறித்து மாநிலத் தலைமைக்கு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கை அடிப்படையில், கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you