கலைஞர் நூற்றாண்டு விழா: சிறைவாசிகளுக்கு கண் கண்ணாடி

78பார்த்தது
மதுரை மத்திய சிறையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது

மதுரை மத்திய சிறையில் பல்வேறு சிறப்பு மருத்துவர் கொண்டு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்திய சிறைப்பணி(PMI)தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய மெகா கண் மருத்துவ முகாம் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சிறைவாசிகளுக்கு கண் பிரச்சனை தொடர்பான கிட்டப் பார்வை தூர ப்பார்வை , வெள்ளை எழுத்துக்கள், மற்றும் கண் அழுத்த நோய் கண் புரை ஆகியவற்றிற்கு சிகிச்சை பெற்றனர் இதில் கண் கண்ணாடி தேவைப்படும் 146 ஆண் சிறைவாசிகளுக்கும் 18 பெண் சிறைவாசிகளுக்கும் ஆக மொத்தம் 164 சிறைவாசிகளுக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி இன்று மதுரை மத்திய சிறையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு பழனி அவர்கள் தலைமையில் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் மற்றும் பிஎம்ஐ நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி