போலியான புகார் அளித்த பெண் மீது வழக்குப் பதிய உத்தரவு

70பார்த்தது
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் ராஜமோகன் மீது பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை மதுரை போக்சோ நீதிமன்றம் விசாரித்து, ராஜமோகனுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. தண்டனையை ரத்து செய்யக் கோரி ராஜமோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி மாற்றி மாற்றி வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமியின் தாயாரின் 2-வது கணவரை மனுதாரர் தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இதை மறைத்துள்ளனர். மருத்துவ ஆதாரம் இல்லை. இவற்றிலிருந்து மனுதாரர் மீது அளிக்கப்பட்ட புகார் உண்மையில்லை என்பது தெரிகிறது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது.

சிறுமியின் தாயார் மற்றும் அவரது 2-வது கணவர் இடையிலான கூடா நட்புறவில் இருந்து தப்பிக்க மனுதாரர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பொய் புகார் அளிக்கப்பட்டதற்காக சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் 22-வது பிரிவின் கீழ் மதுரை மாநகர் காவல் ஆணையர் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை திரும்ப பெற வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி