ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்னும், சரியான காரணங்கள் கூறாமல் தமிழ்நாடு ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் , இது தொடர்பான கோப்புகளை மீண்டும் தமிழ்நாடு அரசு 8 வாரத்திற்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.