லக்னோ அணிக்கு 191 ரன்கள் இலக்கு
By Maheshwaran 70பார்த்ததுஐபிஎல் 2025: LSG அணிக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது SRH அணி. டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த LSG, அதிரடியாக விளையாடும் SRH பேட்டர்களை சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்தினர். SRH 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47, அன்கிட் 36 மற்றும் நிதிஷ் 32 ரன்கள் எடுத்தனர். LSG தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4, ஆவேஷ் கான், ராத்தி, பிஷ்னோய் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றனர்.