கள்ளச்சாராயம் தான் உயிரிழப்புக்கு காரணம்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.

64பார்த்தது
கள்ளச்சாராயம் தான் உயிரிழப்புக்கு காரணம்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் இன்று (ஜூன் 19) 5 பேர் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் அவர்கள் இறந்ததாக தகவல் வெளியானது. இதை மறுத்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலின் உண்மையில்லை” என தெரிவித்தார். இது குறித்து பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ”உயிரிழந்த 4 பேர் மரணத்திற்கு காரணம் கள்ளச்சாராயம் தான், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் நான் நேரில் பேசினேன், கள்ளச்சாராய விவகாரத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது.” என்றார்.