மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை.. அதிர்ச்சி வீடியோ!

49572பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஷஹாதா நகரில் சிறுத்தை ஒன்று மருத்துவமனைக்கு புகுந்து நோயாளிகள், பொதுமக்களை அலற விட்டது. மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்த சம்பவத்தால், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பீதியடைந்தனர். டோங்கர்கான் சாலையில் உள்ள ஆதித்யா மருத்துவமனையில் செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி சிறுத்தையை பத்திரமாக பிடித்ததால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சிறுத்தை அங்கிருந்த ஜெனரேட்டர் அறைக்கு பக்கத்தில் வைத்து அடைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.