கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகேயுள்ள இடிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (37). இவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்கின்றார். சம்பவம் அன்று இவரது வீட்டில் முகமூடி அணிந்த இரண்டு பேர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 6 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். இதுகுறித்து அவர் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகிறார்கள்.