கிருஷ்ணகிரியில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு சுற்றுலா துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முன்னதாக சுற்றுலா அலுவலர் ஆனந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் ஜாபர் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று சுற்றுலா பற்றிய கருத்துக்களை அருங்காட்சியத்தின் ஓய்வு பெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர், கல்வெட்டு காவலர் கோவிந்தராஜ் சிறப்புரை வழங்கினார்.
தொல்லியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை தொல்லியல் துறை அலுவலர் பரந்தாமன், இந்திய சுற்றுலா தொடர்பான கருத்துகளை பெண்ணேஸ்வரன், கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணப்படுத்துதல் தொடர்பாக கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர்கள் எடுத்துரைத்தனர்.