பர்கூர் சட்ட மன்ற தொகுதி தெற்கு வடக்கு பாக முகவர்கள் கலந்துரையாடல் சந்திப்பு கூட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பர்கூர் நகரில் வாக்கு சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாகம் முகவர்கள் கலந்துரையாடல் சந்திப்பு கூட்டம் தெற்கு, வடக்கு ஒன்றியம் ஒன்றிய பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளரும் பர்கூர் தொகுதி தேர்தல் பார்வையாளர் கோபி கலந்துகொண்டு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை யொட்டி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற பாடுபட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ. சி. நாகராசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா, பர்கூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அறிஞர், பர்கூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி. ஜி. ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன் பேரூர் கழக செயலாளர் வெங்கட்டப்பன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் டி. லட்சுமி பிரியா, பர்கூர் பேரூராட்சி கவுன்சிலர்
கே. ஜி. எஸ். கார்த்திக், ஒன்றிய பொருளாளர் குப்புசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் முரளி, மதிவாணன், ஜெயந்தி ராதாகிருஷ்ணன், கண்ணையன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.