பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி.

594பார்த்தது
பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை ஆடுத்துள்ள காட்டனூர் பகுதியில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் நெற்பயிர் சாகுபடியில் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் கடைப்பிடித்து சாகுபடி செய்வது குறித்து கிருஷ்ணகிரி பாம்பாறு உபவடி நிலப்பகுதி - நிலை விவசாயிகளுக்கு வயல்வெளிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வேலம்பட்டி, காட்டனூா், என். வெள்ளாலபட்டி மற்றும் கிட்டம்பட்டி ஆகிய 4-ங்கு கிராமங்களில் பண்ணைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பண்ணையளவில் கிடைக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு, சத்துக் கரைசல், வளா்ச்சி ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரித்து பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி