கேரட் தோட்டத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

74பார்த்தது
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷ் மாவட்டம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் இன்று சூளகிரி, சப்படி, உங்கட்டி, செம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஜெயபிரகாஷ் மற்றும் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.

அப்போது உங்கட்டி கிராமம் அருகே விவசாய தோட்டத்தில் கேரட் அறுவடை செய்து கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களிடம் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் பேசி இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தார் அப்போது தொழிலாளர்கள் அவருக்கு வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்வதாக உறுதி அளித்தனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான அதிமுகவினர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி