மக்கும் குப்பை மக்காத குப்பை- செயல்முறை பயிற்சி விளக்கம்

67பார்த்தது
மக்கும் குப்பை மக்காத குப்பை- செயல்முறை பயிற்சி விளக்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வி துறையின் சார்பில் கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மக்கும் குப்பை, மக்காத குப்பை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் மகேந்திரன் தலைமைதாங்கினார். காகிதங்கள், இலைகள் போன்றவை மக்கும் குப்பை எனவும், நெகிழி பைகள் மக்காத குப்பை எனவும் மாணவர்களுக்கு செய்முறையுடன் விளக்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களிடம் இரண்டு குப்பைகளையும் தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி