கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் போலீசாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நேற்று ஒசூர் டி. எஸ். பி. அலுவலக வளாகத்தில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த், ஏடிஎஸ்பி சங்கு, மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிவலிங்கம் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. 53 இருசக்கர வாகனம், 2 ஆட்டோ, 52 நான்கு சக்கரவாகனங்கள், ஒரு லாரி ஆகியவை ரூ. 26. 68 லட்சத்துக்கு ஏலம்போனது.