கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ். இவர் மனைவி ராமலிங்கம்மா (65). இவருடைய மகன் சக்கரவர்த்தி(45).இவர் மனைவி இறந்த நிலையில் தாயிடம் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாயை அறிவாளால் 14 இடங்களில் வெட்டியுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்த மத்தூர் போலீசார் ராமலிங்கம்மாள் உடலை மீட்டு சக்கரவர்த்தியை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.