டூவீலர் மீது கார் மோதல்- குழந்தைகள் உள்பட 3 பேர் காயம்.

1578பார்த்தது
டூவீலர் மீது கார் மோதல்- குழந்தைகள் உள்பட 3 பேர் காயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா மத்தூர் அடுத்த சின்ன மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (45). இவர் 3 பெண் குழந்தைகளில் சஞ்சனா (4), ஹரிணி (6) ஆகியோர் சம்பவம் அன்று ஹரிணி. சஞ்சனா இருவரும் தங்களது தாத்தா காசியுடன் டூவீலரில் ஒபுளிகாட்டூர் சென்றபோது நாகம்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார், டூவீலர் மீது மோதியது.

இதில் காசி மற்றும் 2 குழந்தைகளும் காயம் அடைந்தனர். அவர்களை 3 பேரையும் மீட்டு மத்தூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.