கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது இந்த ஏலத்தில் 1, 643 கிலோ கொப்பரை தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 132. 32- க்கும், குறைந்தபட்சம் ரூ. 70-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ. 126. 89-க்கும் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ. 2. 02 லட்சம் ஆகும். இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வந்திருந்தனர். நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய்கள் நல்ல விலைக்கு போனது. விற்பனை செய்யப்பட்ட தொகைகள் உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன.