பாசிசத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுங்கள் - கனிமொழி வாழ்த்து

77பார்த்தது
பாசிசத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுங்கள் - கனிமொழி வாழ்த்து
ராகுல் காந்தியின் 54வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகுல் காந்தி, உங்களுடைய அர்ப்பணிப்பு, தொலைநோக்குப் பார்வை, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காக்க இந்த கடினமான காலத்தில் உங்களின் தைரியமான செயல்கள் பாராட்டத்தக்கது. நீங்கள் நல்ல உடல்நலம், ஆரோக்கியம் பெறவும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதில் வெற்றியை பெறவும் உங்களை இந்த நாளில் வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி