சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நீதித்துறை ஊழியர்களின் நலன் கருதி கரூர் மாவட்ட நீதிபதி, அனைத்து ஊழியர்களுக்கும் மனவளக்கலை மன்றம் மூலம் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற அலுவலக பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இப்ப பயிற்சியில் முதல் நாளான நேற்று அனைத்து ஊழியர்களும் ஆர்வமாக கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடைந்தனர்.