நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.

80பார்த்தது
நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், முதலியார் தெருவை சேர்ந்தவர் கணேசன் வயது 63.


இவர் மே 11ஆம் தேதி இரவு 8 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் சித்தலவாய், அங்காளம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாபேட்டை அருகே உள்ள பில்லா பாளையம் பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற கணேசன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கணேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய கௌதம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி