விபத்துகளை தடுக்க ஸ்பீடு பிரேக்கில் கோடுகள் வரையும் பணி.

75பார்த்தது
விபத்துகளை தடுக்க ஸ்பீடு பிரேக்கில் கோடுகள் வரையும் பணி தீவிரம்.

சாலைகளில் லேசான மற்றும் கனரக வாகனங்கள் பாதுகாப்பாக செல்வதற்காகவும், விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், சாலை ஓரங்களிலும், குறிப்பிட்ட சில இடங்களில் சாலையை நடந்து, கடந்து செல்பவர்களுக்காகவும் எச்சரிக்கை செய்யும் விதமாக கோடுகளும், சிக்னல்களும் வரையப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை போடப்பட்டது.


இதனால், ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த கோடுகளும், எச்சரிக்கை அறிவிப்புகளும் மறைந்து போனது.

இதில் கரூர் - திண்டுக்கல் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்த அப்பகுதியில் அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்வதற்காக, ஸ்பீடு பிரேக்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஸ்பீடு பிரேக்குகள் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, அதன் மீது வெள்ளை கோடுகள் வரையப்பட்டது அழிந்து போனதால், வாகனங்கள் வேகமாக வரும் போது, ஸ்பீடு பிரேக்கில் ஏறி இறங்கும்போது வாகனங்கள் நிலை தடுமாறி சென்று வந்தது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக செய்தி வெளியானது.


இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் நேற்று ஸ்பீடு பிரேக்கர்கள் மீது கோடுகள் வரையும் பணியை துவக்கியதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி