கொங்கு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

69பார்த்தது
கரூர் வெண்ணமலை கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 22 , 23& 24வது பட்டமளிப்பு விழா அட்லஸ் கலையரங்கில் ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் துவங்கி மதியம் 1மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் செல்வம் கலந்து கொண்டு, இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற 1520 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

கொங்கு அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, இணைச்செயலாளரும் கல்லூரியின் தாளாளருமான மீனாட்சிK. ரமேஷ், கொங்கு கலை அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் வனிதாமணி, கொங்கு கல்வி அறக்கட்டளையின் செயலாளர் விசா. மாசண்முகம், பொருளாளர் வி. வீரப்பன், துணைத்தலைவர் கே. அம்மையப்பன் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கல்லூரி இருபால் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி