கரூர் பேருந்து நிலையத்தில் நடிகை கௌதமி பிரச்சாரம்

1940பார்த்தது
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமை இரவு 9 மணி அளவில், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

முன்னதாக தரகம்பட்டி குஜிலியம்பாறை வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் நடிகை கௌதமி வாக்கு சேகரித்து விட்டு, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள், அரசு உதவி உடன் அதிகளவில் இளைஞர்களை குறி வைத்து, விற்பனை செய்யப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு குறிப்பாக திமுக தலைமையிலான அரசு தவறிவிட்டது. எனவே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கேட்டுவிட்டது எனவே திமுக ஆட்சியை அகற்றிட நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகிகள் காளியப்பன், தானேஸ் என்கிற முத்துக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி