டூவீலர் மீது கார் மோதி விபத்து; கணவன்-மனைவி படுகாயம்

3331பார்த்தது
டூவீலர் மீது கார் மோதி விபத்து; கணவன்-மனைவி படுகாயம்
கரூர் மாவட்டம், வாங்கல், ஓடையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 55. இவர் மார்ச் 16ஆம் தேதி மதியம் 3 மணியளவில், இவரது மனைவி கோகிலா உடன் அவர்களுக்கு சொந்தமான டூவீலரில் கரூர்- வெள்ளியணை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் காளியப்பனுர், சரவணா காய்கறி கடை அருகே சென்ற போது, அதே சாலையில் பின்னால் வந்த, கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள காட்டூர் பகுதி சேர்ந்த நாசர் வயது 30 என்பவர் ஓட்டி வந்த கார், வேகமாக சென்று ஆறுமுகம் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நிலைகுலைந்து டூவீலருடன் கீழே விழுந்ததில், ஆறுமுகம் மற்றும் கோகிலா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய நாசர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி