காக்காவாடியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மற்றும் குப்பைகளால் மறுசுழற்சி செய்யப்படும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்..
காக்காவடி பகுதியில் அமைந்துள்ள
ஸ்ரீ ரங்கா பாலிமர் என்ற தனியார் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் அழிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யப்பட்டு, ஆடை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் தொழிற்சாலையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் சேர்ந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தனித்தனியாக பிரித்து, ஒவ்வொரு கட்டமாக எப்படி நூலாக தயார் செய்யப்படுகிறது என்ற முறைகளை பார்வையிட்டனர்.
இங்கு தயாரிக்கப்படும் ஜவுளி ரகங்களை கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.