ஆற்றல் தவறி விழுந்து வாலிபர் பலி

561பார்த்தது
ஆற்றல் தவறி விழுந்து வாலிபர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட
செம்மங்காலை பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று காலை 10 மணி அளவில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் சப்பாத் கடவில் குளிக்க இரண்டு பைக்கில் வந்துள்ளனர். அப்பொழுது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது ஒருவர் சுமார் 20 துணிகள் துவைக்க வந்துள்ளார் மற்றவர்கள் உதவி செய்துள்ளனர்.
அதில் ஒருவரை ஆற்று வெளௌளம் இழுத்துச் சென்றுள்ளது.
நேற்று மாலை 6. 30 மணி வரை தீயணைப்பு படை வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை போலீசார் சம்பவ இடம் வருகை தந்து ஆற்றில் ஓரத்தில் இருந்த துணி முகவரியை தேடியபோது ரெடிமேடு துணி என்பதால் முகவரியும் கிடைக்கவில்லை ,
அதன் பிறகு சி சி கேமரா மற்றும் பெண்களிடம் விசாரித்தபோது இவர்கள் செம்மங்காலையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது களியக்காவிளை போலீசார் விசாரித்து வருகின்றனர் இன்று காலையும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியை தொடர்ந்தனர். இதை அடுத்து இன்று காலையில் அவரை சடலமாக மீட்டனர். விசாணையில் அவர் மருதன்கோடு கொம்பன் குழிவிளை மணி என்பவரது மகன் ரமேஷ் குமார்( 35) என்பது தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி