மலையோர கிராமங்களில் சாரல் மழை

50பார்த்தது
மலையோர கிராமங்களில் சாரல் மழை
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதை அடுத்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மாலை வேலைகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை குமரி மலையோரப் பகுதிகளில் பெய்து வருகிறது. அவ்வகையில் இன்று மலையோரப் பகுதிகளான களியல், கடையால், பேச்சிப்பாறை கோதையாறு, பத்துகாணி, ஆறுகாணி போன்ற பகுதிகளில் 2- மணி முதல் 3 7மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் நேற்று பத்துகாணி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதனைச் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பொறுக்கி பாட்டில்களில் சேகரித்தனர். சிறிது நேரத்தில் அந்த ஆலங்கட்டி ஐஸ் போன்று உருகி தண்ணியாக மாறியது. இந்நிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று மதியம் 12: 30 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது.