சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து

73பார்த்தது
சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிஜின்(31) , வாடகை கார் ஓட்டுனர் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று விட்டு கிராத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் களியக்காவிளை வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த ரெடுப்பு சுவரில் மோதியது , இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சஜின் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தின் மீட்டு களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி