நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னையன் மகன் சந்தோஷ்குமார் ( 48). இவருக்கு புஷ்பலதா (43) என்ற மனைவியும் இந்துஜா (22, அஞ்சனா ( 17) என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 27 வருடங்களாக மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி ஐ எஸ் எப்) தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா என்ற பகுதியில் பணிபுரிந்தார்.
கடந்த ஒரு மாதமாக மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு உள்ளாகி சிகிட்சையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். இன்று (10-ம் தேதி) மதியம் இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டு ராணுவ வீரர் இறந்துள்ளது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.