குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாததால் அணைகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு உள்ளதால் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை பேச்சிப்பாறை அணையின் உள்வரத்து 299 கன அடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் 43. 49 அடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து 509 கன அடி தண்ணீர் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தது. திற்பரப்பு அருவியில் கடந்த ஐந்து நாட்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இன்று தீபாவளி ஆன காரணத்தினால் காலை முதலே வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர் வந்து குவிய தொடங்கினர்.
ஆனால் அடுவியல் யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. இன்று 6 வது நாளாகவும் திற்பரப்பருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க பட்டிருந்தது.