குமரி- அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு

82பார்த்தது
குமரி- அண்ணாமலையின் உருவ பொம்மை எரிப்பு
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மீது பல்வேறு கொலை வழக்குகள் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பி வருவதாக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந் நிலையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கினார். போராட்டத்தில் அப்போது திடீரென
அண்ணாமலையின் உருவபொம்மையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து போராட்டம் நடத்தினர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், தாரகை கத்பர்ட் , பிரின்ஸ் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி