தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ். இவர் பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை அணுகி அவரது மகனுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4.7 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால், அபிலாஷ் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து அந்தப் பெண் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மோசடி வழக்குப் பதிவு செய்த தக்கலை போலீசார், அபிலாஷை நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.