சிவன் கோவில்களில் பிரதோஷதன்று சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம். நேற்று தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி நாகர்கோவில் கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோவிலில் சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், களபம் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. பிரதோஷ நாயகர் கோவிலை மும்முறை வலம் வந்தார்.