இஸ்ரோவின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நாராயணன் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகாட்டுவிளை ஊருக்கு நேற்று பிப் .2 வருகை தந்தார். பின்னர் அங்குள்ள காணியாளர்சாமி கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஊர்மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.