கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை மணவிளை அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், 2019ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர் துவக்கி வைத்தார். கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி சிறப்புரை வழங்கினார். முன்னாள் மாணவிகள் கூட்டமைப்பின் தலைவி சொர்ண ஜோலிஜா வரவேற்றார். கட்டுமானத்துறை பேராசிரியர் சினி சரோஜா நன்றி கூறினார். பேராசிரியை பியுலா 2019ம் ஆண்டு முன்னாள் மாணவிகள் கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர்களை அறிமுகம் செய்தார். விழாவில் கல்லூரி இயக்குநர் தருண் சுரத், துறை தலைவர்கள், முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், பேராசிரிய, பேராசிரியைகள் மற்றும் முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டனர்.