கருமண்கூடலில் மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண ஜோடி

2630பார்த்தது
கருமண்கூடலில் மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண ஜோடி
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கருமன்கூடல் தொழிலதிபர் முருகேசன் மற்றும் மண்டைக்காடு பேரூராட்சி முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன் தம்பதியரின் மகள் டாக்டர். ஹரீஷ்மா தேவிக்கும் அம்மாண்டிவிளை மணலிவிளை அருள்துரை - கங்காவதி தம்பதியரின் மகன் இஞ்சி. அருண் பிரகாஷுக்கும் மணமகள் இல்லத்தில் வைத்து திருமணம் நடந்தது.

மணவிருந்து நிகழ்ச்சி முடிந்ததும் மணமகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் மணமகளை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் மணமக்களை மாட்டு வண்டியில் மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்து விழிப்புணர்வு செய்தனர்.
 
இது குறித்து மணமகளின் குடும்பத்தார் கூறியதாவது, தற்போது போக்குவரத்து வாகனங்கள் பெருகி போக்குவரத்துக்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்களின் வருகைக்கு முன்பு நமது முன்னோர்கள் எப்படி? வாழ்ந்தார்கள் என்பதை தற்போதைய சந்ததியினர்க்கு தெரிவதில்லை. தற்போது பெருகி விட்ட மோட்டார் வாகனங்களால் காற்று மாசுப்படுகிறது. சுற்றுச்சூழலும் கேடாகிறது.

தினமும் நடந்து செல்லும் தூரத்திற்கு கூட மக்கள் வாகனங்களில்தான் செல்கிறார்கள். நடந்து செல்லும் தூரத்திற்கு மோட்டார் வாகனங்களை தவிர்த்து சைக்கிளில் செல்லலாம். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இதனை பொதுமக்களிடையே விழிப்புணர்வு செய்யவே மணமக்களை நாம் முன்னோர்கள் பயணம் செய்த மாட்டு வண்டியில் அனுப்பி வைத்தோம் என்றனர்.