வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்  2 பேர் கைது

73பார்த்தது
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்  2 பேர் கைது
நாகர்கோவில் அருகே உள்ள ராமன்புதூர் பகுதி  கோல்டன் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விபச்சாரம் நடப்பதாக நேசமணி நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையில் போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

     அப்போது வீட்டில் உள்ள ஒரு  அறையில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஆணும் அரைகுறை ஆடையுடன் இருந்தனர். போலீசாரை கண்டது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

      விசாரணையில் அவர்கள்  வில்லுக்குறி புதுகிராமம் பகுதியை சேர்ந்த ஜெகன் ஜோஸ் (39)என்பதும் அவரிடம் இருந்த பெண் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணுக்கு புரோக்கர்கள் சிலர் பணத்தாசை  காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது.

     இதனைத் தொடர்ந்து ஜெகன் ஜோசை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண் நாகர்கோவில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த சாம் டேவிட், கல்லன்குழி நாகராஜன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி