கன்னியாகுமரி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

1863பார்த்தது
கன்னியாகுமரி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
கன்னியாகுமரி, கேப் உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளைமறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம் பாறை கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்ன முட்டம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைக்குளம், ஊட்டுவாழ்மடம், ஆரோக்கியபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின் பகிர்மான கழக செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி