வாக்குச்சாவடி முன்பு வாக்காளர்கள் போராட்டம்

60பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வெம்பேடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் காலை முதல் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலு கடந்த 15 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக அதே இடத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற தேர்தல் துவங்கியதை தொடர்ந்து காலை 12 மணி அளவில் வாக்களிக்க சென்றுள்ளார் அப்போது அவருடைய வாக்கு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் தேர்தல் அதிகாரியிடம் சேலஞ்ச் வாக்கு வாக்களிக்க அனுமதி கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தேர்தல் அதிகாரி ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறி இருந்த நிலையில் பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்களிக்கக் கூடாது என்று திமுகவினர் அவ்விடத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் வேலுவுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் 12 மணி முதல் தொடர்ந்து கோரிக்கை பதாகை உடம்பில் அணிந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் இறுதியில் அப்பகுதி மக்களோடு சேர்ந்து வெம்பேடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி