காஞ்சி மாநகராட்சியில் தொடரும் நிர்வாக குளறுபடியால். சலசலப்பு!

80பார்த்தது
காஞ்சி மாநகராட்சியில் தொடரும் நிர்வாக குளறுபடியால். சலசலப்பு!
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ், 51 வார்டுகள் உள்ளன. இதில், தி. மு. க. , வைச் சேர்ந்த 9வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, மேயராகவும், காங். , கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதன் துணை மேயராகவும் செயல்பட்டு வருகின்றனர். மாநகராட்சி தேர்தல் நடந்தது முதலே, பல்வேறு அரசியல் நகர்வுகளும், நிர்வாக குளறுபடிகளும், உட்கட்சி பூசல்களும் இப்போது வரை தொடர்ந்தபடி உள்ளன. மாநகராட்சி கூட்டம், கடந்த அக்டோபர் 5ம் தேதி நடந்தது. இதையடுத்து நவம்பரில் கூட்டம் நடைபெறவில்லை. டிச. , 6ம் தேதி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, கமிஷனர் செந்தில்முருகன் தங்களை மதிக்கவில்லை எனக்கூறி தி. மு. க. , கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து அ. தி. மு. க. , கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால், போதிய கவுன்சிலர்கள் இன்றி கூட்டம் நடத்த முடியாமல் போனது. இதனால், கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய, 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளாட்சி துறையின் விதி. அக். , 5க்கு பின், 2024 ஜன. , 5க்குள் கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில், மேயர் மகாலட்சுமி உள்ளார்.

தொடர்புடைய செய்தி