மாமல்லபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை இயக்குனர் திடீர் ஆய்வு

70பார்த்தது
மாமல்லபுரத்தில் உன்ன நியாய விலை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன ஐ ஏ எஸ் திடீர் ஆய்வு.


செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடையநூர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்
பல்வேறு நியாய விலை கடைகள் கூட்டுறவுத்துறை ஆரம்ப வேளாண் கடை மற்றும் சங்கங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ஜே ஆர் கூட்டுறவு அதிகாரிகள் உடன் இருந்தனர் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்ட போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் நியாய விலை கடை பயனாளிகள் இருந்தனர். அதை பிரித்து தற்போது 4000 பேர் பயன்படும் வகையில் பிரித்து வழங்கப்பட்டுள்ளது

இதுபோல் ஆய்வு மேற்கொண்டபோது அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமற்ற நிலையில் அரிசி உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் அனைத்து அரவை ஆலைகளிலுமிருந்து அரிசி தரமாக வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதை அடுத்து தற்போது தரமாக வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி