சூனாம்பேட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு

51பார்த்தது
தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவும் அவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழக காவல்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக, சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் செங்கல்பட்டு மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு எஸ். ஐ. , அமுதா, பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற துணை தலைவர் தேவசிகாமணி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி