கரிவரத பெருமாள் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை

1538பார்த்தது
அயோத்தி ராமர் கோயில் திறப்பையொட்டி
பெரும்பேர்கண்டிகை கரிவரத பெருமாள் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் அருகே உள்ள அருள்மிகு. கரிவரத பெருமாள் திருக்கோயிலில் அயோத்தி ராமர் திருக்கோயில் பிராண பிரதிஷ்டை திறப்பு விழாவை யொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அச்சிறுபாக்கம் அருகே உள்ள
பெரும்பேர்கண்டிகை
அருள்மிகு. கரிவரத பெருமாள் உள்ளது. இத் திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் ஆகும்.

உத்திரபிரதேசம் மாநிலம்,
அயோத்தியில் புதியதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ராமர் திருக்கோயில் பிராண பிரதிஷ்டை காரணமாக கொண்டாடும் விதமாக பெரும்பேர்கண்டிகை கரிவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி காலை 10 மணிக்கு ஸ்ரீ ராமருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் நடைபெற்றன.

மாலை 6. 00 மணிக்கு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், ராமர், லட்சுமணன் சீதாதேவியுடன் கோவிலின் உள் பிரகாரததில் வலம் வந்து அருள்பாலித்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாரதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :